National Moth Week  நிகழ்வானது 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இந்த வருடம் ஜூலை 17 -25, 2021அன்று நடைபெறும் இந்நிகழ்வு 10வது வருடம்.  இந்த நிகழ்வு தொடங்கப்பட்ட முக்கிய நோக்கம்  நம்மை சுற்றி காணப்படும் அந்துப் பூச்சிகளின் வாழ்க்கை நிலைகள் வாழ்விட சூழல் போன்றவற்றை தெரிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டது.  நம்மை சுற்றி ஏராளமான பூச்சியினங்கள் காணப்படுகிறது இருப்பினும் அவைகளில் அந்துப்பூச்சிகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. காலப்போக்கில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியில் இப்பூச்சிகள் பல்வேறு மாற்றங்கள் அடைந்துள்ளது   குறிப்பாக  தன்னுடைய நடத்தைகள், நிறம் மற்றும் இறக்கையின் மேற்புறத்தில் காணப்படும் குறியீடுகள் ஆகியவற்றை தன்னுடைய வாழிட சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியுள்ளது. மேலும் தேனீக்களுக்கு அடுத்தபடியாக  மகரந்தச் சேர்க்கையில் இவைகளின் பங்கு மிகவும் முக்கியமானது. உலகில்  ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் முதல் 5 லட்சம் வகை அந்துப்பூச்சிகள் இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கணிக்கின்றனர். ஏனென்றால் இப்பூச்சிகள் குறித்த ஆய்வு மிகவும் குறைவு.  ஆகையால் எந்த ஒரு பாகுபாடுமின்றி நாம் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நம் வீட்டிற்கு அருகில் காணப்படும் அந்து பூச்சிகளை பதிவு செய்து வருங்கால அறிவியலுக்கு உதவுவோம்.  

நீங்கள் செய்ய வேண்டியது 

உங்கள்  மின் விளக்கிற்கு வரக்கூடிய அந்து பூச்சிகளை புகைப்படம் எடுத்து அதை iNaturalist என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும். இதற்கு நீங்கள் அந்து பூச்சியை பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை இந்த தளத்தில் பதிவேற்றம் செய்ய தெரிந்தால் போதும்.  ஏனென்றால் நம்மை சுற்றி ஏராளமான அந்துபூச்சிகள் காணப்படுகின்றன இவைகள் குண்டூசி தலைப்பகுதி அளவு முதல் மனிதனின் தலை  வரை அளவு உண்டு.  இவைகளில் பெரும்பாலான பூச்சிகள் இரவு நேரங்களில் மட்டுமே காண முடியும் ஆனால் ஒரு சிலவற்றை பகல் நேரங்களிலும் காணலாம். 


மேலும் இந்நிகழ்வில் அனைத்து நாட்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை. கொடுக்கப்பட்ட கால இடைவெளியில்  உங்களால் முடிந்த 

குறிப்பிட்ட நாட்கள் கலந்து கொள்ளலாம்.


உங்களுடைய இடத்தை பதிவு செய்ய கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்க 

https://bit.ly/2TH48KQ