அந்துப் பூச்சிகள் கம்பளிப்புழு நிலையில் பல்வேறு விதமான உணவு முறைகளை மேற்கொள்ளும் மேலும் இவைகள் குடும்பத்திற்கு குடும்பம் மாறுபடும்.
பொதுவாக இலைகள். தண்டுகள். பூக்கள், பழங்கள் போன்றவற்றை உண்ணும்.
மேலும் மரங்கள் தரைகளில் காணப்படும் லைக்கன்கள் மற்றும் பாசிகள் ஆகியவற்றையும் உண்ணும்.
ஒரு சில வகைகள் அசைவ பிரியர்கள், அசுவிணி பூச்சி, ஈக்கள் போன்ற பூச்சிகளை உண்ணும்.மேலும் இவைகள் சிலந்திகள் , எறும்பு புழு, துணிகள் மற்றும் கம்பளி, பதப்படுத்தப்பட்ட தானியங்கள், கைவிடப்பட்ட சிலந்தி வலைகள் போன்றவற்றையும் உண்ணும்.
முதிர்ந்த அந்துப்பூச்சியானது தாவரங்களிலிருந்து தேன், அழுகிய தாவரங்கள் மற்றும் விலங்குகள், பழுத்த பழங்கள், விலங்குகளின் கழிவுகள், தேனீக் கூட்டிலிருந்து தேன், விலங்குகளின் இரத்தம் மற்றும் கண்ணீர், மண்ணில் இருந்து தாதுக்களை உறிஞ்சுதல் இதுபோன்ற உணவு முறைகளை மேற்கொள்ளும்.
0 Comments