வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் அந்துப்பூச்சிகள் இவைகள் இரண்டும் செதிலிறகிகள்

(Lepidoptera) என்ற வரிசையின்  கீழ் வருகிறது  அதாவது இதனுடைய இறக்கைகள்

நுண்ணிய செதில் போன்ற அமைப்புகளால் மூடப்பட்டிருக்கும். பெரும்பாலானவர்கள்

இவைகள் இரண்டையும் பிரிப்பதில் குழப்பம் அடைவது உண்டு  கீழே

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள்   இவ்வரிசையில் உள்ள

பெரும்பான்மையானவற்றிற்கு  பொருந்தும்.  மேலும் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு

குறிப்புகளுக்கும் விதிவிலக்கும் உண்டு.



மேலே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை விட கீழ் காணக்கூடிய குறிப்புகள்

வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் அந்த பூச்சிகளை பிரிப்பதற்கு  உதவியாக இருக்கும்.

இதிலும் விதிவிலக்குகள் இருந்தாலும் பெருமளவில் இல்லை.  உணர்ச்சிக்

கொம்புகளின்  அடிப்படையில்  இவைகளைப் பிரிக்கலாம் அதாவது

வண்ணத்துப்பூச்சியின் உணர்ச்சிக் கொம்பு நுனிப்பகுதி தடித்தும் (1) அல்லது

நுனிப்பகுதி தடித்து கொக்கி (2) போன்ற அமைப்பை பெற்றிருக்கும்.  இவைகளின்

உணர்ச்சிக் கொம்பு அதன் தலைப் பகுதியின்  முன்புறம் நீட்டிக்கொண்டிருக்கும். 

அந்துப் பூச்சிகளின் உணர்ச்சிக் கொம்புகள்  பல்வேறு தோற்றங்களில் இருக்கும்

அதாவது சீப்பு போன்றும் (3),  தலைப்பகுதியின்  பின்புறம் மடக்கியும் (4),  இறக்கை (5)

போன்ற அமைப்புடனும் இருக்கும்.




 இந்த குறிப்புகளின் அடிப்படையில் வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் அந்துப்

பூச்சிகளை பிரிக்கலாம்.