அந்துப் பூச்சிகளை உற்றுநோக்குவதற்கு  பல்வேறு முறைகள் உள்ளன இருப்பினும் ‘Light sheet’ முறையே  மிகவும் சிறந்தது.  பொதுவாக மெர்குரி, டங்ஸ்டன் போன்ற  மின் விளக்குகளை  அறிவியல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவர்.  இந்த முறையில்  அந்துப்

பூச்சிகள் வந்து உட்காருவதற்கு  ஏதுவாக  சுவர் அல்லது பெரிய  வெள்ளை காட்டன்

துணியின்  மேல் இந்த மின் விளக்குகள் ஒளிர் ஊட்டப்படுகிறது இவ்வாறு செய்வதன் மூலம்  இவைகளை புகைப்படம் எடுப்பதற்கு ஏதுவாக இருக்கும்.  பொதுவாக இவைகள்

காலை 6 மணி முதல் காலை சூரிய உதயத்திற்கு முன் வரை ஒளிர் ஊட்டப்படுகிறது. 

முக்கியமாக சூரியன் வருவதற்கு முன் விளக்குகளை அணைக்க வேண்டும்

இல்லையென்றால் பூச்சிகள் இங்கிருந்து பறக்க முடியாமல்  மற்ற உயிரினங்களுக்கு

இரையாக நேரிடும். ஆகையால் சூரிய வெளிச்சம் வருவதற்கு முன்பு கட்டாயம் மின்

விளக்குகளை அணைக்க வேண்டும்.