பூச்சிகளின் வாழ்க்கையில் இரண்டு வகையான மாற்றங்கள் உண்டு 

  1. முழுமையடையாத மாற்றம்

  2. முழுமையடைந்த மாற்றம் 



முழுமையடையாத மாற்றம்

இந்த மாற்றத்தில் வெளிவரக்கூடிய  பூச்சியானது முட்டையிலிருந்து வெளிவரும்

போது எந்த வடிவத்தில் இருந்ததோ அதே வடிவத்தில் அதன் அளவு பெரிதாகிக்

கொண்டே இருக்கும் ஆனால் முதிர்ச்சி அடைந்த பிறகு மட்டுமே இறக்கைகளை

கொண்டிருக்கும் முதிர்ச்சி அடைவதற்கு முன்பு இறக்கைகளை பெற்றிருக்காது.

எடுத்துக்காட்டு: வெட்டுக்கிளி


முழுமையடைந்த மாற்றம்

இந்த மாற்றத்தில் நான்கு படி நிலைகள் உள்ளன அதாவது  1) முட்டை,2) கம்பளிப்புழு,  3) கூட்டுப்புழு மற்றும் 4) முதிர்ந்த பூச்சி

1) முட்டை

முதிர்ந்த பூச்சியானது முட்டையை தாவரங்களின்   இலைகள், தண்டுகள்,   பூக்கள் போன்றவைகளில்  தனியாகவோ அல்லது கூட்டமாகவோ இடும். இந்த முட்டைகள் பல்வேறு வடிவங்களை  கொண்டிருக்கும் அவைகள்  ஒவ்வொரு குடும்பங்களைச் சார்ந்த பூச்சிகளை பொறுத்து மாறுபடும். மேலும் வாழிடச்  சூழலுக்கு ஏற்ப பல்வேறு நிறங்களையும் பெற்றிருக்கும்.  முட்டையிலிருந்து கம்பளி புழுவானது மூன்று முதல் ஏழு நாட்களில் வெளிவரும் ஒரு சில வகைகள் காலநிலை மாற்றங்களை பொருத்து  தனக்கு ஏற்ற சூழ்நிலை நிலவும் போது வெளிவரும். 


2) கம்பளிப்புழு

இந்த படிநிலை மிகவும் முக்கியமான  ஓன்று.  குறிப்பாக தாவரங்களை கட்டுக்குள் வைப்பதற்கும்,  முதுகெலும்பு உடைய உயிரினங்களில்   முக்கியமாக பறவைகளின்  இனப்பெருக்க காலத்தில் தேவைப்படுகிற ஊட்டச்சத்து பெறுவதற்கும் உதவுகிறது.  இரண்டாவது நிலையான  கம்பளிப்புழு நிலையில் பூச்சிகள் 5  முதல் 14 நாட்கள் இருக்கும்.   சில வகைகள் 2 முதல் 3 ஆண்டுகள் வரை கம்பளிப்புழு நிலையிலிருக்கும் அதாவது தனக்கு ஏற்ற சூழ்நிலை வரும் வரை அடுத்த நிலைக்கு மாறாது.  


3) கூட்டுப்புழு

இந்தப் படிநிலையில் இதுவரை சேகரித்த ஆற்றலை பயன்படுத்தி பூச்சியாக

மாறுவதற்கு தயாராகி கொண்டிருக்கும்.  எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக்

கொள்வதற்கு பல்வேறு  உத்திகளை கையாளும் அந்துப் பூச்சிகளை பொருத்தவரை

தன்னை சுற்றி கூடு போன்ற அமைப்பை உருவாக்கி அதனுள் கூட்டுப்புழு

நிலையினை அடையும். வண்ணத்துப்பூச்சிகள் கூடு போன்ற அமைப்பை

உருவாக்குவதில்லை. கூட்டுபுழுவில்  இருந்து  5 முதல் 14 நாட்களில்  பூச்சிகள் வெளி

வரும். 


4) முதிர்ந்த பூச்சி


இவ்வாறு வெளிவரக்கூடிய முதிர்ந்த  பூச்சியானது  தன்னுடைய வாழிட சூழலுக்கு

ஏற்றவாறு பல்வேறு வடிவங்களை,  நிறங்களை,  அளவுகளை  கொண்டிருக்கும்.

பூச்சிகளில்  குறிப்பாக அந்துப் பூச்சிகள் தேனீக்களுக்கு அடுத்தபடியாக

மகரந்தசேர்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.  மேலும் உணவுச் சங்கிலியில் மிக

முக்கிய பங்கு வகிக்கிறது.