பொதுவான வகைப்பாடு

வகைபாடு என்று பார்க்கும்போது நம்மை சுற்றி ஏராளமான  உயிரினங்கள் காணப்படுகின்றன  அவைகள் ஒவ்வொன்றும் பெரும்பாலும் வெளித் தோற்றத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.  உதாரணமாக ஏதாவது ஒரு பொருள் ஒன்றை எடுத்துக் கொள்வோம் அதை நாம் இரண்டு வகையாக பிரிக்கலாம் ஒன்று உயிர் உள்ளது மற்றொன்று உயிரற்றது. இவைகளில் உயிர் உள்ளது என்ற ஒன்றை தாவரங்கள் மற்றும் விலங்குகள் என இரண்டாகப் பிரிக்கலாம். இவைகளில் விலங்குகளை முதுகெலும்பு உடையவை முதுகெலும்பு அற்றவை எனவும் பிரிக்கலாம் முதுகெலும்பற்ற உயிரினங்கள் பல்வேறு பிரிவுகள் உள்ளது இவைகளை மேலும் இரண்டாக கால்கள் உடையது  மற்றும் அற்றது  என  பிரிக்கலாம். இவ்வாறு கால்கள் உடைய  உயிரினங்களை கணுக்காலிகள் (Arthropoda) என்று  அழைக்கலாம் இதற்கு பொருள் இதனுடைய கால்கள்  கணு போன்ற அமைப்பை பெற்று உடலுடன் இணைக்கப்பட்டிருக்கும் இவற்றின் கீழ் பல்வேறு பிரிவுகள் உள்ளன நாம் இவற்றில் ஆறு கால்களையுடைய பூச்சிகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

(மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த  பிரிவுகள் எளிதாக புரிந்து கொள்வதற்காக மட்டுமே இவைகள் அனைத்துமே மிகப்பெரிய பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது.)

 உயிரியல் வகைப்பாடு

பூச்சி இனங்களில் பல்வேறு வகைகள் உள்ளன அவைகள் ஒவ்வொன்றும் அவற்றின் புறத் தோற்றத்தின் அடிப்படையில் பல்வேறு வடிவங்களில் இருந்தாலும் கீழே  குறிப்பிட்டுள்ள அடிப்படை குறிப்புகளை பெற்றிருக்கும்.



பூச்சியின் உடலை  மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்  அதாவது  தலைப்பகுதி,  நெஞ்சுப் பகுதி  மற்றும் அடிவயிறு மேலும் இவைகள் ஆறு கால்களை பெற்றிருக்கும் அதாவது மூன்று இணைந்த கால்களை  பெற்றிருக்கும். ஆகையால் ஆங்கிலத்தில் Hexapoda என்று அழைக்கப்படுகிறது. மேலும் இவைகள்  ஒரு இணை உணர்ச்சி கொம்புகளை கொண்டிருக்கும். இவைகளின் கண்கள் கூட்டுக் கண்களாகவும்,  வாய்ப்பகுதி  உறிஞ்சு குழல் போன்ற அமைப்பையும் அல்லது இலைகள்  போன்றவற்றை உண்பதற்கு கடினமான  தாடைகள் போன்ற அமைப்பையும்,  இவற்றின் இறக்கைகள்  முன்னிறக்கை மற்றும் பின்னிறக்கை பெற்றிருக்கும்.  ஒரு சில இறக்கைகள்  இல்லாமலும் அல்லது சிறிய அளவிலான இறக்கைகளையும் பெற்றிருக்கும். 




உயிரியல்  வகைப்பாட்டின் படி உயிரினங்கள் பல்வேறு உட்பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள  உயிரினத்திற்கான உயிரியல் வகைப்பாட்டை பார்க்கலாம்  


உலகம் - விலங்கு (Animal)
தொகுதி -  கணுக்காலிகள் (Arthropoda)
வகுப்பு -  பூச்சிகள் (Insecta)
வரிசை -   செதிலிறகிகள் (Lepidoptera)
குடும்பம் - Sphingidae
பேரினம் - Hippotion
சிற்றினம் - celerio


Hippotion celerio