அந்துப் பூச்சிகள் எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக பல்வேறு
விதமான உத்திகளை கையாளும்
ஒரு சில முதிர்ந்த அந்துப் பூச்சியானது முட்டைகளை இடும் போது குளவி போன்ற எதிரிகளிடமிருந்து முட்டையை பாதுகாத்துக்கொள்ள தனது வயிற்றுப் பகுதியில் உள்ள உரோமங்களை வைத்து முட்டையை மூடும்.
கம்பளிப் பூச்சி நிலையில் திறமையாக மறைந்து உண்ணும் அதாவது பார்ப்பதற்கு
குச்சி மற்ற உயிரினங்கள் போன்றும் மாய தோற்றம் அளிக்கும். ஒரு சில வகைகள்
இலைகளைப் தைத்து அதனுள் இருக்கும்.
தன்னுடைய உணவு தாவரத்திலிருந்து பெற்ற வேதிப் பொருட்களை நஞ்சாக உடலில் சேகரித்து வைத்திருப்பதன் மூலம் எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்கிறது.
இதற்கென உடம்பிலுள்ள அரிக்கும் உரோமங்கள் இவற்றிற்கு பாதுகாப்பளிக்கிறது மேலும் ஒரு உணர்ச்சி உறுப்பாக செயல்படுகிறது.
கூட்டுப்புழு நிலையில் தன்னை சுற்றி உரோமங்களை கொண்டு மூடிக் கொண்டு மற்ற உயிரினங்களிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கிறது.
முதிர்ந்த நிலையில் பல்வேறு விதமான வித்தியாசமான தோற்றத்துடன் இருப்பதாகவும் ஒரு சில சுவை குறைந்து இருப்பதாலும் மற்ற உயிரினங்கள் இதை நெருங்குவது இல்லை.
ஒரு சில குடும்பத்தை சார்ந்த அந்து பூச்சிகள் வவ்வால்களின் மீயொலி சத்தத்தை குழப்பி விடுவதன் மூலம் அதைப் பாதுகாத்துக் கொள்கிறது.
இந்த Death-head Hawk Moth அந்துப் பூச்சிகள் தேனீக்கள் போன்ற பிரமோன்களை தனது உடலில் உற்பத்தி செய்வதன் மூலம் தேனீக்களை ஏமாற்றி தேனை சாப்பிடும்.
0 Comments