செடியில குச்சி குச்சியா ஒட்டிருக்கே அதெல்லாம் என்னது ?
கூட்டுப்புழு நிலையிலிருந்து வெளிவந்த அந்துப்பூச்சி (Eumeta variegata -paulownia bagworm) |
ஒவ்வொரு உயிரினமும் எதிரிகளிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள தங்களுடைய வாழிடச்சூழலுக்கு ஏற்றவாறு பாிணாம வளா்ச்சி அடைந்துள்ளது.
பாதி உடலை வெளியே நீட்டி கொண்டிருக்கும் கம்பளிப்புழு |
குச்சி, காய்ந்த இலை நகா்ந்து செல்வதை நம்மில் பெரும்பாலனவா்கள் பார்த்திருக்கலாம். அது சாதரணமான குச்சி கிடையாது அதனுள் Psychidae (Bag worm or Case moth) என்ற குடும்பத்தை சார்ந்த அந்துப்பூச்சியின் கம்பளிப்புழு வாழ்ந்து வருகிறது. அதாவது இக்குடும்பத்தை சார்ந்த அந்துப்பூச்சியின் முட்டையிலிருந்து வரும் கம்பளிப்புழுவானது தன்னுடைய உடம்பில் சுரக்கும் ஒருவித திரவத்தை பயன்படுத்தி தன்னை சுற்றி காணப்படும் குச்சி, காய்ந்த இலை போன்ற பொருள்களை வைத்து உறை போன்ற அமைப்பை உருவாக்தி அதனுள் வாழ்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்க்கு பிறகு இந்த கம்பளிப்புழு இந்த கவச உறையினுள் கூட்டுப்புழு நிலையினை அடைகிறது பின்பு குறிப்பிட்ட கால அளவை கடந்த பின்பு முதிர்ந்த அந்துப்பூச்சியானது வெளிவருகிறது.
செடியில் குச்சி போன்ற உறையுடன் தொங்கி கொண்டிருக்கும் கம்பளிப்புழு |
இவற்றில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த குடும்பத்தை சார்ந்த பெண் அந்துப்பூச்சிகள் இறக்கைகள் அற்றவையாக உள்ளன. மேலும் இவைகள் ஆண் இனத்தின் உதவி இல்லாமலும் தன்னுடைய சந்ததியை உருவாக்கும் திறன் கொண்டவையாகவும் உள்ளது.
மேலும் தகவலுக்கு
சு. தளவாய் பாண்டி,
ஆராய்ச்சியாளா் (அந்துப்பூச்சி ஆர்வலா்)
ஏட்ரியின் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், மணிமுத்தாறு.
Email: thalavaipandi@atree.org
0 Comments