இவ்வளவு பொிய அந்துப்பூச்சியா ?
What a big size moth is this?
நம்மை சுற்றி ஏராளமான அந்துப்பூச்சிகள் காணப்படுகின்றன ஆனால் நமது வீட்டிற்கு அருகிலும் மற்றும் வீடுகளை சுற்றிலும் காணப்படுபவைகள் பெரும்பாலும் சிறியதாகவும் மற்றும் நடுத்தர அளவு கொண்டதாகவும் இருக்கும். ஆனால் இதே இது நாம் தங்கியிருக்கும் பகுதி நன்கு அடா்ந்த காடுகளுக்கு மத்தியிலோ அல்லது விளிம்பு பகுதிலோ அமைந்திருந்தால் அங்கு இந்த சாட்டார்னிடே (Saturniidae) என்ற குடும்பத்தை சார்ந்த அந்துப்பூச்சியை காண வாய்ப்புகள் அதிகம். இக்குடும்பத்தை சாாந்தவைகள் மிகவும் அழகானவைகளாகவும் மற்றும் அளவில் பொியதாகவும் இருக்கும். நான் என்னுடைய அந்துப்பூச்சி குறித்த ஆய்வு களத்தில் முதன் முதலில் இக்குடும்பத்தை சார்ந்தவைகளை பார்த்த போது மிகவும் வியந்து போனேன்.
There are many moths around us. But the ones found near and around our homes are mostly small and medium in size. But if the area where we are staying is located in the middle of forests or on the edge there are more chances to see this big moth belonging to the Saturniidae family. The species from this family are the largest and most beautiful. I was amazed when I first came across this family moths in the field.
இந்தியாவின் இரண்டாவது பொிய அந்துப்பூச்சி Attacus taprobanis Moore, [1883] The second largest moth of India Attacus taprobanis Moore, [1883] |
உலகின் மிகப்பொிய அந்துப்பூச்சி என்று அழைக்கப்படும் அட்லஸ் அந்துப்பூச்சி (Atlas moth - Attacus atlas (Linnaeus, 1758)) இக்குடும்பத்தை சார்ந்தவையாகும் இவை சுமார் 30 சென்டி மீட்டா் அளவு கொண்டவையாகும் அதாவது இவை ஒரு வளா்ந்த மனிதனின் மண்டை அளவில் இருக்கும் மேலும் இவைகள் வடஇந்தியாவில் மட்டுமே காணப்படுகின்றன, தென்னிந்தியாவில் இந்தியாவின் இரண்டாவது பொிய அந்துப்பூச்சியான லெஸ்ஸா் அட்லஸ் அந்துப்பூச்சி(Lesser Atlas Moth or Sri Lankan Atlas Moth - Attacus taprobanis Moore, [1883]) காணப்படுகிறது.
Atlas moth Attacus atlas(Linnaeus, 1758)), known as the world's largest moth which is belonging to this Saturniidae family are about 30 cm in size which is about the size of an adult human skull and are found only in North India, but in South India the second largest moth the Lesser Atlas Moth or Sri Lankan Atlas Moth -Attacus taprobanis Moore, [1883]) is found.
கையில் இந்தியாவின் இரண்டாவது அந்துப்பூச்சி (அளவுக்காக) India's second largest moth on hand (for size comparision) |
அந்துப்பூச்சியின் கிளைத்த உணா்ச்சிகொம்பு Feathery antennae of the moth |
குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு தன்னுடைய உமிழ்நீரை பயன்படுத்தி கவசஉறையை கிழித்து உள்ளே இருந்து வெளிவரும், இவ்வாறு வெளிவரும் இந்த அந்துப்பூச்சிகள் எதுவும் உண்பதில்லை, ஏனென்றால் இவைகளுக்கு உறிஞ்சுக்குழல் கிடையாது ஆகையால் தன்னுயை கம்பளிப்புழு நிலையில் சேகாித்த ஆற்றலை தன்னுடைய மற்ற தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளும், இவ்வளவு பொிய அந்துப்பூச்சியானது நீண்ட நாள்களுக்கு உயிர் வாழ்வதில்லை இவைகள் தன்னுடைய இனச்சோ்க்கைக்கு பிறகு முட்டைகளை இட்டவுடன் இரண்டு வாரங்களில் இறந்து விடுகின்றன, இவைகளில் பெண் அந்துப்பூச்சியானது தன்னுடைய பிரமோன்களை காற்றில் பறக்க விடுகின்றன ஆண் அந்துப்பூச்சியானது தன்னுடைய உணா்ச்சி கொம்புகள் மூலம் அதனை கண்டறிந்து பெண் பூச்சியிடம் இணைச் சேருகின்றன.
After a certain period of time, it tears up the cocoon and comes out from inside, these moths that come out from the cocoon do not eat anything, because they do not have a proboscis, so they use the energy stored in the larval stage for their other needs, such a large moth does not survive for a long time. They die within weeks. During breeding the female moth releases her hormones into the air, and the male moth detects with its antennae and mates with the female moth.
பக்கவாட்டு தோற்றம் |
பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பட்டு வகைகளான முகா, டசார், எரி போன்றவைகள் இக்குடும்பத்தை சார்ந்த அந்துப்பூச்சிகளிடமிருந்து தயாரிக்கப்படுகிறது.
Economically important types of silk such as Muga, Dasar, Eri etc. are produced from moths belonging to this family.
மேலும் தகவலுக்கு
S.Thalavaipandi
Researcher (Moths enthusiast),
ATREE's Agasthyamalai Community Conservation Centre, Manimuthar.
Email: thalavaipandi@atree.org
0 Comments