|
கூட்டிற்குள் கம்பளிப்புழுவை கொண்டுச் செல்லும் குழவி The wasp that carries the caterpillar into the nest |
நம்மில் பெரும்பாலனவா்கள், மஞ்சளும் பழுப்பும் நிறமுடைய குழவியானது கம்பளிப்புழுவை தூக்கிச் செல்வதை பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த குழவி ஏன் இதனை தூக்கி செல்கிறது மற்றும் எதனுடைய கம்பளிப்புழு இது என்று யோசித்து இருக்கிறீர்களா?
Most of us have seen a yellow and brown caterpillar carrying a caterpillar. But how many of you know, why this wasp carrying these caterpillars, and which insect caterpillar is this?
ஆங்கிலத்தில் Potter wasp என்று அழைக்கப்படும் இந்த குழவியானது, தனக்கு அருகாமையில் ஈரமான மண் (களிமண், செம்மண்) தென்பட்டால் அதனை வைத்தும் அல்லது நீர் இருக்கும் பகுதியில் இருந்து நீரை உறிஞ்சி அதனை மண்ணுடன் கலந்து பானை போன்ற வடிவிலான கூட்டினை கட்டுகிறது. இவ்வாறு கூட்டினை கட்டி முடித்த கூடானது காய்ந்த பிறகு தன்னுடைய சுற்று வட்டாரத்தில் உள்ள வண்ணத்துப்பூச்சி அல்லது அந்துப்பூச்சிகளின் கம்பளிப்புழுக்களை இந்த குழவி தன்னிடம் உள்ள வேதிப்பொருள்களை பயன்படுத்தி கம்பளிப்புழுவின் நரம்பு மண்டலத்தை தாக்கி கம்பளிப்புழுவை கொல்லாமல் செயலிழக்கச் செய்கிறது.இது போன்ற குழவிகள் வெறும் கம்பளிப்புழுக்களை மட்டும் சார்ந்து இல்லாமல் சிலந்திகள், ஈக்கள், வெட்டுக்கிளிகள் போன்ற மற்றப்பூச்சிகளையும் சார்ந்து வாழ்கின்றன. மேலும் இத்தளமானது குறிப்பாக அந்துப்பூச்சிகள் குறித்த தகவல்களை தொிவிப்பதற்காக என்பதால் வண்ணத்துப்பூச்சி மற்றும் அந்துப்பூச்சிகளின் கம்பளிப்புழுக்களை குறிப்பிட்டு கூறியுள்ளேன்.
The potter wasp builds a pot-shaped nest using moist soil (clay or red soil) from nearby places or absorbs water from the watery area and mixes it with the soil to build the nest.
Once the nest has been completed in this way then the wasp leaves the nest to dry, once the nest dried up the wasp finds the caterpillars of butterflies or moths in its vicinity and attacks the nervous system of the caterpillar using the chemicals it has and paralyze it without killing the caterpillar. Such kinds of wasps do not depend only on caterpillars but also depend on other Arthropods such as spiders, flies, grasshoppers, etc. And since this website is specifically for moths, So I have mentioned butterfly and moth caterpillars.
இவ்வாறு பின்பு இக்குழவியானது தன்னுயை முட்டையை அந்தப் புழுவின் மேல் அல்லது கம்பளிப்புழுவை கூட்டிற்குள் வைப்பதற்கு முன்பு கூட்டினுள் முட்டையை இட்டு பின்பு ஈரமான மண்ணை வைத்து கூட்டினை மூடுகின்றன. சில நாட்களுக்கு பிறகு கூட்டிலிருக்கும் குழவியின் முட்டையானது பொரித்து செயலிழந்த கம்பளிப்புழுவை உண்கிறது. பின்பு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு குழவி கூட்டுப்புழு நிலையை அடைந்து முதிர்ந்த குழவியாக வெளிவந்து மீண்டும் இந்த சுழற்சியை மேற்கொள்கிறது.
The wasp covers the nest with moist soil once the eggs laid on top of the caterpillar or inside the nest. After a few days, the caterpillar hatches and feeds on the caterpillar inside the nest. Then after some intervals, the caterpillar reaches the pupa stage and emerges as an adult, and repeats this life cycle.
இது போன்ற ஒட்டுண்ணி வகை குழவியானது நமது சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்து மற்றப் பூச்சி இனங்களை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள உதவுகிறது.
Such kinds of Parasitoid wasps help to keep our ecosystem in balance and keep other insect species in control.
இப்போது ஏன் குழவியானது கம்பளிப்புழுவை தூக்கி செல்கிறது என்பது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
Now, I hope all of you been understood why this wasp carries the caterpillar into the nest.
இப்படிக்கு நான்
S.Thalavaipandi
Research Associate (Moths enthusiast),
ATREE's Agasthyamalai Community Conservation Centre, Manimuthar.
Email: thalavaipandi@atree.org
0 Comments