Agrius convolvuli (Linnaeus, 1758) – Convolvulus Hawkmoth 
கட்டையுடன் மறைந்து இருக்கும் அந்துப் பூச்சி

நான் எங்கள் குழுவுடன் பூனைப்பருந்துகள் (Harriers) தங்கும் இடத்தை ஆய்வு செய்வதற்காக நமது பகுதியில் காணப்படும் வறல் புல்வெளிக்கு சென்றிருந்தோம். பூனைப்பருந்து இவைகள் வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு வடகிழக்கு பருவமழை காலக்கட்டத்தில் உணவு மற்றும் இருப்பிடம் தேவைக்காக வலசை வரும் ஒரு பறவையினமாகும் இவைகள் மற்றப் பருந்துகள் போன்று மரங்கள், மின்கம்பங்கள் போன்றவைகளில் தங்காமல் புல்வெளிகளில் அதாவது தரைகளில் தங்கும் இயல்பு கொண்டவையாகும்.

பூனைப்பருந்துகள் குறித்து மேலும் தொிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பாா்க்கவும்.

I went with our team to a dry grassland in our area to investigate the presence of Harriers. Harrier is a bird species that comes from foreign countries to our country during the northeast monsoon season for food and shelter. They do not stay in trees, electric poles, etc. like other raptors such as Black Kite, Brahmini Kite, etc. The Harriers roost on the ground of grasslands.

Click on the link below to learn more about Harriers.
harrierwatch India (atree.org)  

அவ்வாறு புல்வெளியில் நடந்து கொண்டிருக்கும் போது, ஏதார்த்தமாக தரையில் கிடந்த காய்ந்த குச்சியை கையில் இழுத்த குழுவில் ஒருவர் திடீரென்று அந்தக் குச்சியில் அந்துப்பூச்சி போன்ற ஏதோ ஒன்று நகர்வதை கண்டு என்னை அழைத்தனர். அங்கு சென்று பார்த்த போது தெரிந்தது அது மிகவும் வேகமாக பறக்கும் திறன் மற்றும் நீண்ட குறிஞ்சுக் குழல் கொண்ட Hawkmoth (Sphingidae) குடும்பத்தை சார்ந்த Agrius convolvuli (Linnaeus, 1758) – Convolvulus Hawkmoth  இந்த அந்துப்பூச்சியின் முன்னிறக்கை மற்றும் பின்னிறக்கைகள் கட்டையின் நிறத்தை போன்று மிகவும் அழகாக மறைந்து இருந்தது. இது அசையாமல் அந்தக் குச்சியில் அமா்ந்திருந்தால் பூச்சி இருப்பதையே கண்டுப்பிடிக்க முடியாது.

பெரும்பாலும் இந்த அந்துப்பூச்சிகள் தங்களை காத்து கொள்வதற்காக  அவைகள் போன்றே தோன்றம் கொண்ட பரப்பில் உட்காரும். மேலும் தொந்தரவு செய்யப்படும் போது தன்னுடைய பின்னிறக்கையை திடீரென்று விரித்து பயமுறுத்தும். 

While walking on the grass, one member from the team picked up a dry stick lying on the ground and suddenly saw something moving on the stick, they called me to check the insect which was on the stick. It was a moth, the members of this family moth have the ability to fly very fast and have a long proboscis. This is  Agrius convolvuli (Linnaeus, 1758) belonging to the Hawkmoth (Sphingidae) family - Convolvulus Hawkmoth's. The wings were very beautifully hidden like the color of the wood. If it sits motionless on the stick, the presence of the insect cannot be detected.

Often these moths sit on surfaces that look similar to them to protect themselves. And when disturbed it will suddenly spread its hindwings and scare using the color on its body. 


அந்துப் பூச்சியின் வண்ணமயமான உடல் பகுதி 


இப்படிக்கு நான்

S.Thalavaipandi

Research Associate (Moths enthusiast),

ATREE's Agasthyamalai Community Conservation Centre, Manimuthar. 

Email: thalavaipandi@atree.org