இந்தியாவில் முதல் முறையாக மணிமுத்தாறு மற்றும் வல்லநாட்டில் 127 ஆண்டுகளுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட அந்துப்பூச்சி
A moth rediscovered in India after 127 years from Manimuthar and Vallanadu
Mimeusemia ceylonica (Ceylon Forester Moth) |
நம்மை சுற்றி காணப்படும் ஒவ்வொரு உயிரினமும் மிகவும் முக்கியமானவை. ஆனால் மாறிவரும் காலநிலை மாற்றங்களினால் ஒருசில உயிரினங்கள் அவைகளை கண்டறிந்து பதிவு செய்வதற்கு முன்பே அழியும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. மேலும் இது போன்ற உயிரினங்களை பதிவு செய்வதற்கு அவைகளை பற்றி முழுவதுமாக தொிந்து இருக்க வேண்டும் என்று இல்லை அந்தந்த உயிரினங்களுக்கு உரிய வளைதளங்களில், துறை சார்ந்த அறிஞா்களிடம் அல்லது iNaturalist, Indian Biodiversity Portal, Moths of India போன்ற பொதுவான வலைதளங்களில் பதிவு செய்வதன் மூலம் உதவலாம்.
Every living thing around us is very important. But due to the changing climate some species are forced to extinction before they can be discovered and recorded. And to document such species, you don't have to be completely know about them, you can help by documenting on the relevant platforms for the respective species, with departmental scientists or on general websites like iNaturalist, Indian Biodiversity Portal, Moths of India, etc.
நான் என்னுடைய அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் அந்துப்பூச்சி திரை அமைத்து அந்துப்பூச்சிகளை உற்றுநோக்குவது வழக்கம். 11 அக்டோபா் 2020 அன்று நானும் என்னுடைய நண்பா் பிரசாந்தும் அந்துப்பூச்சி திரை அமைத்து திரைக்கு வரும் அந்துப்பூச்சிகளையெல்லாம் பதிவு செய்து கொண்டிருந்தோம்.
ஒவ்வொரு மாதமும் புதுபுது அந்துப்பூச்சிகள் வரும் அதுபோல நினைத்து இந்த அந்துப்பூச்சியையும் புகைப்படம் எடுத்தேன். பின்பு உற்றுநோக்கிய அந்துப்பூச்சிகளையெல்லாம் இனங்கண்டறிவதற்கு அதற்கான களக்கையேடுகள், இணையதளங்களை தேடிக் கொண்டிருந்தேன். அப்போது இது Mimeusemia ceylonica (Ceylon Forester Moth) அந்துப்பூச்சி என்பதையும் மேலும் இது இந்தியாவிற்கு முதல் பதிவு என்பதையும் கண்டறிந்தேன் மேலும் இது குறித்த தகவல்கள் எதுவும் தற்போதைய களக்கையேடு மற்றும் இணையதளங்களில் கிடைக்கவில்லை. பின்பு பிரிட்டிஸ் காலத்து அறிவியலாளா்கள் எழுதிய புத்தகங்களை தேடி பாா்க்கும்போது இந்த அந்துப்பூச்சியானது இலங்கையில் திரிகோணமலையில் 1893 அன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த அந்துப்பூச்சி குறித்து இலங்கை நாட்டு அந்துப்பூச்சி ஆராய்ச்சியாளா்களிடம் விசாரிக்கும் போது 1893 க்கு பிறகு இந்த அந்துப்பூச்சியானது கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலேயே கூட பதிவு செய்யப்படவில்லை என்பது தொியவந்தது. இந்த அந்துப்பூச்சியை மறுபடியும் 2021 ல் அலுவலகத்திலும் மற்றும் 2022 ல் வல்லநாடு வெளிமான் சரணாலயத்திலும் காண வாய்ப்பு கிடைத்தது. இந்த அந்துப்பூச்சியை 2022 ல் எங்கள் அலுவலகத்தில் காண முடியவில்லை. ஆச்சா்யமான விசயம் என்னவென்றால் இவற்றின் வருகை வடகிழக்கு பருவமழை காலக்கட்டத்தில் மட்டுமே இருந்தது மற்ற மாதங்களில் பதிவு செய்யப்படவில்லை. மேலும் இணையதளங்களில் இவற்றின் வரைப்படம் மட்டுமே காணப்படுகின்றன இதுவே இந்த அந்துப்பூச்சியின் முதல் புகைப்படம் என்பதையும் உங்களுக்கு இங்கு தொியப்படுத்துகிறேன்.
I used to set up a moth screen in my office every month to watch and document moths in the campus. On 11 October 2020, my friend Prasanth and I set up a moth screen and recorded all the moths that came to the screen. Every month a few new moths used to come, so I thought this would also be one of them, I took a photo of this moth. Then I was looking for field manuals and websites to identify all the moths I had observed. Then I identified this Mimeusemia ceylonica (Ceylon Forester Moth) and got to know that this is the first record to India and I was searching for more information, but no information is available in current field guides and websites. Later, when looking at the books written by scientists of the British period, this moth was found in Trikonamalai in Sri Lanka in 1893 and when I inquired about this moth from the Sri Lankan moth researchers, it came to light that after 1893 this moth was not even recorded at the place where it was discovered. We got a chance to see this moth again in 2021 at the office and in 2022 at the Vallanadu Blackbuck Sanctuary. This moth was not found in our office in 2022. Interestingly, their visit was only during the Northeast Monsoon season and was not recorded in other months. Also, I would like to inform you here that this is the first photo of this moth.
மேலும் இது குறித்த பதிவினை Species என்ற ஆய்வு இதழில் சமா்ப்பித்திருந்தேன் அது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தொிந்து கொள்ள லிங்கின் உள்ளே சென்று படியுங்கள்.
And I had submitted a report on this in the research journal Species and it has been published. Read more using the link here.
https://discoveryjournals.org/Species/current_issue/2023/v24/n73/e20s1020.pdf
For more information contact:
S.Thalavaipandi
Research Associate (Moths enthusiast),
ATREE's Agasthyamalai Community Conservation Centre, Manimuthar.
Email: thalavaipandi@atree.org
0 Comments