பறவையின் எதுக்களித்த உருண்டைகளை சாப்பிடும் அந்திப் பூச்சியின் கம்பளிப் புழு

நம்மை  சுற்றி ஏராளமான உயிரினங்கள் காணப்படுகின்றன ஒவ்வொன்றும் பல்வேறு மாறுபட்ட உணவு முறைகளை அவற்றின் வண்ணம், வடிவம் மற்றும் வாழிடச் சூழலுக்கு ஏற்றவாறு கொண்டுள்ளது. 

2017, அன்று பூனைப்பருந்துகளின் உணவு குறித்து, அவற்றின் எதுக்களித்த (வாந்தியெடுத்த) உருண்டைகளை (regurgitated pellet) ஆய்வு செய்து கொண்டிருந்த போது, உருண்டைகளை சேகாித்து வைத்திருந்த நெகிழி பையில் இருந்து ஏதோ ஒன்று பறந்து கொண்டிருந்த சத்தம் வந்து கொண்டிருந்தது அது என்னவென்று பார்க்கும் போது அதில் சில சிறிய அளவிலான அந்திப்பூச்சிகள் காணப்பட்டது. மேலும் ஆய்வுக்காக குடுவையில் தண்ணீரில் நனைய வைத்திருந்த உருண்டைகளிலிருந்து சில கம்பளிப்புழுக்கள் செத்து மிதந்தன, இது என்னவென்று தொிந்து கொள்ள எனக்கு ஆர்வம் அதிகாித்தது, எப்படி அந்திப்பூச்சிகள் இந்த  இறுக்கமாக கட்டப்பட்ட நெகிழிப் பைக்குள் வந்தது என்ற சந்தேகமும் எழுந்தது.

தண்ணீரில் நனைய வைத்திருந்த உருண்டைகளில் செத்து மிதக்கும் கம்பளிப்புழுக்கள்

பெரும்பாலானவா்களுக்கு தொிந்திருக்கும் அந்திப் பூச்சிகளின் கம்பளிப் புழுக்கள் இலைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை உண்ணும் என்று. நான் இது குறித்து தேடிப் பார்க்கும் போது தொிய வந்தது, ஒரு சில குறிப்பிட்ட குடும்பத்தைச் சார்ந்த அந்திப்பூச்சிகளின் கம்பளிப் புழுக்கள் வேட்டையாடி உண்ணும் பறவைகளின் எதுக்களித்த உருண்டைகளில் (Regurgitated pellets) உள்ள சொிமானம் ஆகாத இறக்கை மற்றும் உரோமங்கள் போன்றவற்றை உண்ணும் என்பது. ஆம், டைனிடே (Tineidae) குடும்பத்தை சார்ந்த அந்துப் பூச்சிகளின் கம்பளிப் புழுக்கள் வௌவால்களின் எச்சம் (புலுக்கை), ஆந்தையின் கக்கிய உருண்டைகள் போன்றவற்றை உண்ணும் என்று ஆராய்ச்சி கட்டுரைகள் கூறுகின்றன. ஆனால், இவைகள் பூனைப் பருந்துகளின் (Harriers) எதுக்களித்த உருண்டைகளையும் உண்ணும் என்பது இதுவரை பதிவு செய்யாத ஒன்று.

இவ்வாறாக தனக்கு செரிமானம் ஆகாத பொருள்களை உருண்டையாக வாய் வழியாக சுமார் 60 குடும்பங்களை சார்ந்த 330 சிற்றினங்களை சார்ந்த பறவைகள் எதுக்களிக்கிறது. இந்த உருண்டைகள் மக்கி போக சில வாரங்கள் முதல் மாதங்கள் ஆகும். இந்த டைனிடே குடும்பத்தை சார்ந்த இவ்வகை அந்திப் பூச்சிகள் இந்த உருண்டைகள் மக்குவதற்கு மிகவும் உதவியாக இருக்கின்றது, இந்த அந்திப் பூச்சிகளின் கம்பளிப்புழுக்கள் குழல் வடிவ கவச உறையை உருவாக்கி, அதனுள் இருந்து கொண்டு உணவு உட்கொள்கிறது. பின்பு, சில கம்பளிப்புழு நிலைகளை கடந்தவுடன், இவைகள் இந்தக் கவச உறையின் உள் கூட்டுப்புழு நிலையை அடைகிறது. இந்த ஆய்வில் கண்டறிந்தது, இது மோனோபிஸ் (Monopis) என்ற போினத்தை சார்ந்த ஒரு அந்திப் பூச்சி என்பது. இவ்வகை அந்திப் பூச்சிகள் கருப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும்.

எதுக்களித்த உருண்டைகளில் காணபட்ட கூட்டுப்புழு மற்றும் முதிர்ந்த அந்திப் பூச்சி

2017 ல் மகாராஷ்ரா மாநிலத்தில் இருந்து சோிக்கப்ட்ட எதுக்களித்த உருண்டைகளில் முதலில் கண்டோம் பின்பு 2021 ல் தமிழ்நாட்டில் சேகாித்த எதுக்களித்த உருண்டைகளில் கண்டோம். குறிப்பிடும் படியாக இவைகள் உரோமங்கள் (Hairs) காணப்பட்ட உருண்டைகளில் அதிகமாகவும் அதற்கு அடுத்தபடியாக இறக்கைகள் இருந்த உருண்டைகளிலும் காணப்பட்டது. இவைகளின் பதிவு மற்றும் முதிர்ச்சி மழைக் காலங்களை ஒட்டியே இருந்தது. இன்னும் இது குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள் செய்தால் இவற்றின் பல்வேறு படிநிலைகளை மற்றும் வாழ்க்கை முறையை பற்றி தொிந்து கொள்ளலாம்.

ஆய்வுகட்டுரையை படிக்க இதை சொடுக்கவும்



https://www.researchgate.net/publication/379308997_First_report_of_moth_species_of_the_family_Tineidae_Lepidoptera_in_regurgitated_pellets_of_harriers_in_India



இப்படிக்கு

சு. தளவாய் பாண்டி

S.Thalavaipandi

Research Associate (Moths enthusiast),

ATREE's Agasthyamalai Community Conservation Centre, Manimuthar. 

Email: thalavaipandi@atree.org