பச்சை நிறத்தில இருக்கு எதோட கம்பளிப்பூச்சா இருக்கும் ?

அக்டோபர், 2022. மாதத்தின் கடைசி நாள் அலுவலகத்தின் மதிய இடைவெளிக்கு பிறகு நானும் என்னுடன் பணிபுரியும் சகோதரருமான ஆன்டனி ரிஜாயும் அலுவலகத்தின் மைதானத்தில் சிலந்திகளை தேடி சுற்றி வந்தோம், இவருக்கு கடந்த சில மாதங்களாக சிலந்திகள் மேல் ஆர்வம் ஆகையால் சிலந்திகளை நோக்கி தன்னுடைய பயணத்தை தொடங்கி சென்று கொண்டிருக்கிறார். அவ்வாறு சிலந்திகளை தேடிக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு சத்தம் அண்ணா அண்ணா நான் ஒரு கம்பளிப்புழுவை பார்திருக்கிறேன் அதே எங்கே என்று கண்டுபிடியுங்கள் என்று கூறினான். 


இலையின் மேற்புறத்தில் அமா்ந்திருக்கும் கம்பளிப்புழு

சிறிது நேர தேடுதலுக்கு பிறகு கம்பளிப்புழு இருக்கும் இடத்தை கண்டறிந்தேன். இந்தக் கம்பளிப்புழுவானது மிகவும் அழகாக இலையின் மேற்புறத்தில் அமா்ந்திருந்தது, இலையின் மேற்புறத்தில் காணப்படும் மெல்லிய உரோமங்கள் போன்றும் இலையின் நிறத்தை போன்றும் மறைந்து இருந்தது. இது என்ன அந்துப்பூச்சியாக மாறும் என்பதை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருந்தேன். என்னுடைய கல்லூரி காலக்கட்டத்தில் இருந்தே எனக்கு இந்த ஆர்வம் உண்டு ஏதாவது கம்பளிப்புழுவை கண்டால் அதை டப்பாவில் பிடித்து அவற்றின் ஒவ்வொரு நிலைகளையும் படமெடுத்துவிட்டு வளா்ந்தவுடன்  பறக்க விடுவேன்.


கூட்டுப்புழுவில் இருந்து  வெளிவந்த அந்துப்பூச்சி

அதே போன்று இந்த கம்பளிப்புழுவையும் டப்பாவில் எடுத்துக் கொண்டு உண்ண உண்ண அதனுடைய உணவு தாவரத்தை (Abutilon bidentatum) அளித்தேன் பின்பு 2 முதல் 3 நாள்களில் நான் உண்ண வைத்திருந்த இலைகளை சேர்த்து வைத்து கவசஉறையை (Cocoon) உருவாக்கி அதனுள் கூட்டுப்புழு (Pupa) நிலையை அடைந்தது. பின்பு 10 நாள்களுக்கு பிறகு அழகிய மஞ்சள் நிற அந்துப்பூச்சி (Xanthodes albago) வெளிவந்தது. 


நீங்களும் ஏதாவது கம்பளிப்புழுவை கண்டால் இதே போன்று வளர்த்து பாருங்கள்.


மேலும் தகவலுக்கு

சு. தளவாய் பாண்டி, 

ஆராய்ச்சியாளா் (அந்துப்பூச்சி ஆர்வலா்)

ஏட்ரியின் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், மணிமுத்தாறு.

Email: thalavaipandi@atree.org