இது என்ன பார்க்க பொிய மண்டையோடு மாதிரி இருக்கு?
பொிய மண்டையோட்டு பருந்து சிறகன் Greater Death’s-head Hawk Moth கம்பளிப்புழு |
இந்த வருடம் ஜனவாி (2022) மாதம் நான் அலுவலகத்தில் என்னுடைய அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது என்னுடன் பணிபுரியும் சகோதரா் தணிகைவேல் என்னிடம் வந்து தளவாய் நான் ஒரு கம்பளிப்புழு ஒன்றை கொண்டு வந்துள்ளேன் என்று கூறினார். நான் அவாிடம் எங்கே பார்த்தீர்கள் என்று கேட்ட போது தான் குற்றாலத்தில் உள்ள பராசக்தி கல்லூரியில் பல்லுயிரினங்கள் குறித்த கணக்கெடுப்பிற்கு (Biodiversity survey) சென்றிருந்தேன் அப்போது நான் ஒரு பறவையை பாா்த்த போது திடீரென்று என்னுடைய கண்ணில் தென்பட்டது இந்த பொிய அழகிய மஞ்சள் நிற கம்பளிப்புழு என்று கூறினார். சாி, சீக்கிரம் காட்டுங்கள் என்று கூறினேன். முதலில் அதனை பார்த்தவுடன் என்னுடைய கண்ணில் தென்பட்டது அவற்றின் பின்புறத்தில் காணப்பட்ட வால் போன்ற அமைப்பு பின்பு இது பருந்து அந்துப்பூச்சி Hawk moth (Sphingidae) - யின் கம்பளிப்புழு என்பதை உறுதிப்படுத்தி கொண்டேன்.
தேக்கு இலையை சாப்பிடும் கம்பளிப்புழு |
ஆனால் இது எந்த சிற்றினத்தை (Species) சார்ந்த அந்துப்பூச்சி என்பது எங்களுக்கு தொியாது ஆகையால் இது எதுவாக இருக்கும் என்று Moths of India என்ற இணையதளத்தில் தேடி அதற்கான உணவு தாவரத்தை (Larval host plant) கண்டறிந்தோம். ஏனென்றால் பெரும்பாலும் ஒவ்வொரு இனமும் ஒரு குறிப்பிட்ட உணவு தாவரத்தை கொண்டிருக்கும் அதை தவிர மற்ற தாவரங்களை உண்ணாது மேலும் ஒரு சில வகைகள் பெரும்பாலான தாவரங்களை உண்ணும் குறிப்பிட்ட உணவு தாவரம் என்று ஒன்று கிடையாது. இறுதியில் இந்த கம்பளிப்புழு எழுத்தாணி (Stachytarpheta indica), உண்ணிச்செடி (Lantana camara) மற்றும் தேக்கு (Tectona grandis) போன்ற தாவரங்களை உண்ணும் என்பதை கண்டறிந்தோம், என்னுடைய அறைக்கு அருகில் எழுத்தாணி செடி நிறைய இருந்தது ஆகையால் அதனை உணவாக அளித்தேன். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மண்ணில் கவசஉறையை (Cocoon) உருவாக்கி கூட்டுப்புழு (Pupa) நிலையை அடைந்து பிறகு அழகிய பொிய மண்டையோட்டு பருந்து சிறகன் Greater Death’s-head Hawk Moth (Acherontia lachesis (Fabricius, 1798)) வெளிவந்தது. இவற்றின் நெஞ்சுப்பகுதியில் மண்டையோடு போன்ற குறியீடுகள் காணப்படும்.
நெஞ்சுப்பகுதியில் காணப்படும் மண்டையோடு போன்ற குறியீடு |
வெளிவந்த முதிர்ந்த அந்துப்பூச்சி எழுத்தாணி தாவரத்தில் |
இந்த அந்துப்பூச்சியானது பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. முதலாவதாக உணவு முறையில், இவைகள் தேன் கூட்டிலிருந்து தேனை சாப்பிடும், அப்போது தேன் கூட்டிலிருந்து தேனை சாப்பிடும் போது மற்ற தேனீக்கள் இந்த அந்துப்பூச்சியை தாக்குவது இல்லை ஏனென்றால் இவைகள் தேனீக்கள் போன்ற ஹார்மோன்களை தன்னுடைய உடம்பில் உற்பத்தி செய்வதன் மூலம் தப்பித்து கொள்கிறது. இரண்டாவதாக தற்காப்பு உத்தி, இவைகள் தான் தொந்தரவு செய்யப்படும் போது அல்லது தாக்கப்படும் போது விசில் போன்ற சத்தத்தை எழுப்புகிறது. மூன்றாவதாக வலசை (Migration) செல்வது, இவைகள் வருடந்தோறும் ஐரோப்பில் இருந்து ஆப்பிரிக்காவிற்கு சுமார் 2000 மைல்கள் பயணம் செய்கிறது என்பதை மென்ஸ் மற்றும் அவருடன் பணிபுரியும் நபா்கள் Max Planck Institute of Animal Behavior என்ற நிறுவனத்துடன் சோ்ந்து விமானம் மூலம் சுமார் 14 அந்துப்பூச்சிகளுக்கு 0.2 கிராம் எடையுள்ள பின்தொடரும் கருவியை (Gps tracking) அதனுடைய நெஞ்சுப் பகுதியில் பொருத்தி அதனுடைய வலசையை உற்று நோக்கியுள்ளனா் இதனை Science என்ற அறிவியல் ஆய்வு கட்டுரையில் விளக்கியுள்ளனா்.
இது போன்று பல்வேறு வியக்கத்தக்க மற்றும் ஆர்வமூட்டும் தகவல்கள் புதைந்து இருக்கின்றன.
மேலும் தகவலுக்கு
S.Thalavaipandi
Researcher (Moths enthusiast),
ATREE's Agasthyamalai Community Conservation Centre, Manimuthar.
Email: thalavaipandi@atree.org
0 Comments